உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு

தமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு
தமிழ் அலை ஊடக உலகத்தின் பணித்தொடக்க நிகழ்வு சென்னை சைதாப்பேட்டையில் 15.02.2009 ஞாயிறு காலை நடந்தது.இந்நிகழ்வில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் கணினிகளை இயக்கி பணியை தொடங்கிவைத்தார்.

கவிச்சித்தர் மு. மேத்தா, இலட்சியக்கவி அறிவுமதி, தமிழ்நேயர் சேதுகுமணன், பெனின்சுலா குமார் கியோர் தமிழ் அலை நிர்வாகத்தினரை சிறப்பித்து வாழ்த்தினர்.ஜெம் சாதிக்பாட்சா, தமிழன்பன், கீற்று இரமேஷ், அபுல்கலாம் ஸாத், பெங்களூர் முல்லைக்கோ, சையது முகம்மது, அன்சாரி, நண்பர் தமிழன்பு, அமிர்தம் சுந்தர் உள்ளிட்ட அன்பர்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்.