உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கால்சட்டைக்கால குறிப்புகள்

கால்சட்டைக்கால குறிப்புகள்
இசாக்

1
டைமழை வெள்ளத்தில்
அடித்துக்கொண்டுவந்த
கப்பல்
கவிழ்ந்துக் கிடந்தது
எங்கள் வீட்டுவாசலில்
யார் விட்டதாக இருக்கும்?

2
ய்யனார்கோயில்
இளுப்பைத் தோப்பில்
மரம் ஏறி
பழம்பறிக்க உதவிய கல்குதிரை
பறித்துப்போட்ட கிளி
அஃரிணைகளாகவா இருக்கும்?

3
புதிதாக வாங்கிவந்த
சிப்பாய் பொம்மையின் முன்னிலையில்
காணாமல் போனது
என் பென்சிலும் அழிப்பானும்
சிப்பாய் என்றாலும்
பொம்மை பொம்மைதானே

4
ந்திரா காந்தி
சுடப்பட்டு இறந்த அன்று
குடும்பமே தெருவில் நின்று
கதறி அழுத்து
எங்கள்
வீடு
தீப்பற்றி எரிந்ததால்.

5
ண்டைக்காரன் வீட்டு கொள்ளையில்
கரும்பு உடைத்துத் தின்றதை
எப்படி மறுத்தாலும்
நம்ப மறுப்பார்
கிழிபட்ட உதடுகளைப் பார்த்த அப்பா

நன்றி: கல்கி, அக் 16