உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஒன்றியிருத்தல்

சிறப்பு பிரார்த்தனையொன்றிற்கு
தலைமையேற்ற போதகர்
ஒலிவாங்கியின் உதவியால்
நள்ளிரவைத் தாண்டியும்
மறுமை நாளின்
சிறப்பைத்
தெளிவாக சொல்லிக்கொண்டிருந்தார்
பகலெல்லாம்
உறங்கப்போகிற உற்சாகத்தில்.

மறு நாள்
காலை
பணிக்குப் போகவேண்டுமென்கிற
கவலை
என்னைப்போல பலருக்கு
இறைவன்
ஆசிர்வதிப்பானா.. சபிப்பானா.