உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஒரு விழா

ஒரு விழா

அனைவரும் இணைந்து
பொங்கல் விழா
கொண்டாடுவதென்று முடிவெடுத்தனர்
சிலர்.

எந்த நாளில்
நடத்துவது நல்லதென்றார் ஒருவர்

எல்லோரும் கூடிப்பேசி
முடிவெடுக்கலாமென்றார் மற்றவர்

யாவருக்கும்
தோதான நாளாக
இருந்தால் சிறப்பென்றார் வேறொருவர்

முக்கியமானவர்கள்
கூடி முடிவெடுத்தால்
சரியாக இருக்குமென்றார் இன்னொருவர்

இப்படியான
நகர்வுகளுக்கு பின்
முக்கியமானவர்கள்
ஒரு நாள் அமர்ந்து பேச
இறுதியாக உறுதியானது
ஒரு
விழாவுக்கான நாள்.!
@