உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நாய்களோடு..

நாய்களோடு..

எல்லோரும்
எதிரிகளாக தெரிகிறார்கள்
பலருக்கு

அய்யப்பட்டே
அனைவரையும் ஒதுக்குகின்றனர்
வளர்ந்தோர்

வசதி வாய்ப்பைக் கண்டு
தெருக்காரர்களுக்கு
பொறாமை

பதவி உயர்வால்
உடன் பணியாற்றுவோருக்கு
எரிச்சல்

இப்படியாக
எண்ணியே
அனைவரையும் இழந்த
நகரவாசிகள்

ஓய்வான நேரங்களில்
நடைப்பயணம் போகிறார்கள்
நாய்களோடு.