உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

துவக்கு பரிசளிப்பு விழா 05-06-2006



துவக்கு இலக்கிய அமைப்பு நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு கவிதைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு விழாவும் புரட்சிக்கவிஞர் நினைவுநாள் நிகழ்வும் 05-06-2007 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு பரிசுத்தொகையினை வழங்கினார்.

நிகழ்வு படங்கள்..