உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

''கவிச்சித்தர்'' ஆனார் மு. மேத்தா அவர்கள்.


அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை மிகுந்த பெருமையோடு நடத்திய கவிதைத் திருவிழா 15-06-2007 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்தேறியது. விழா நிகழ்வு விவரங்கள் பிறகு வெளியிடப்படும்.

இந்நிகழ்வின் சிறப்பு பகுதியான கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு ''கவிச்சித்தர்'' அடைமொழி அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்

இவ்விழாவின் பிற நிகழ்வுப்படங்கள் பின்னர்..