உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தோள் கொடுங்கள் தோழர்களே!
தோள் கொடுங்கள் தோழர்களே!

அன்பிற் சிறந்த நண்பர்களுக்கு,

வணக்கம். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கை ஏடாய், வரும் ஆகஸ்டு 1 முதல் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ வெளிவரவுள்ள செய்தியை உங்களோடு மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஏற்கனவே பல நல்ல இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு நல்ல இதழாய் ‘தமிழர்’ அமையும் என்னும் உறுதியை உங்களுக்குத் தருகின்றோம்.

நம்பகமான செய்திகள், அவற்றின் மீதான எங்கள் பார்வை, எல்லோரையும் ஈர்க்கும் நடை, நவீன வடிவமைப்பு ஆகியனவற்றில் முழுக்கவனம் செலுத்துவோம். தமிழ் இன, மொழி மேம்பாடு, சமூகநீதி, அறிவியல் பார்வை ஆகியனவற்றை இலக்காய்க் கொள்வோம்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழத்தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தில், அவர்களின் வெற்றியில், வியர்வையில், கண்ணீரில், குருதியில் தாய்த் தமிழ்நாட்டு மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு எம்மையும் நாம் இணைத்துக் கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போதும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசோடு இணக்கமாய் நின்று, ஈழத்தமிழ்ச் சிக்கலை, அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டுள்ளோம்.

கருஞ்சட்டைத் தமிழர் அந்தப் பணியை விரைவுபடுத்தும் இன்னொரு தளமாக அமையும்.

வரவிருக்கும் இவ்விதழ் பொருளியல் நிலையிலும் வலிமையாகக் காலூன்ற உங்கள் உதவி பெரிதும் தேவையாக உள்ளது. இதழ் வரும் வரை காத்திருக்காமல், எங்கள் மீது நம்பிக்கை வைத்து, இப்போதே நீங்கள் உதவினால், அது எங்கள் வேலைகளை விரைவுபடுத்தும்.

உதவுவீர்கள் என்னும் நம்பிக்கையோடு இந்த மடல் உங்களை வந்தடைகிறது. நன்றி.

தோழமையுடன்
சுப. வீரபாண்டியன்

குறிப்பு: தமிழர் (Thamizhar) என்னும் பெயருக்குத் தொகையை அனுப்பி உதவ வேண்டுகிறோம்.

முகவரி:

கருஞ்சட்டைத் தமிழர்,
122/130, என்.டி.ராமாராவ் தெரு,
ரங்கராசபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024
கைபேசி: +919444516408