உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

புனிதப் பிறப்பு

புனிதப் பிறப்பு

உழைப்பவனின்
குருதிக்
குடித்து
கொழுத்து வளர்ந்த
பெரும் முதலாளிகளே
ஆளும் வர்க்கத்திடம்
நீங்கள்
வாங்கிய விருதுளுக்குள்ளிருந்து
வெளிவருகிறீர்கள்
நல்லவர்களாக

வாக்குப்பெட்டிக்குள்ளிருந்து
நரேந்திர மோடி
வெளி
வந்ததைப் போல