உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இனமான இயக்குநர்களுக்கு வாழ்த்துகள்இனமான இயக்குநர்களுக்கு வாழ்த்துகள்

அண்ணன் சீமான் அவர்களே
அண்ணன் அமீர் அவர்களே

தம்பிகளுக்காக
உங்கள்
மௌனம்
பேசியதற்கே
அஞ்சி நடுங்குகின்றன
தேசிய வியாதிகள்.

நீங்கள்
சிறை மீண்டு
களமாட போகிறீர்களே
அப்போது என்ன செய்யும் இவை.

சிறை
போராளிகளை
சிதைப்பதில்லை
செதுக்கும்
கூர்மையான
செழுமையான
போராளிகளாக செதுக்கும்.