உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

உங்களால் முடியும்

அழித்தொழிப்பின்
வன்கொடுந்துயர்தாளாமல்
தீர்ந்துப்போகாத
நெடுந்தாகத்துடன்
துடித்தழுதுக்கொண்டிருப்பவனின்
தோள் தட்டி
முந்தைய தவறுகளின்
பட்டியல் நீட்டி
திறனாய்வுகளையும் ஆலோசனைகளையும்
அவன்
சோகம் ததும்பும் முகத்தில்
அள்ளி அள்ளித்
தெளிக்கமுடியும் உங்களால்.

ஏனெனில்
நீங்கள்
அறிவுஜீவிகள்!