உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

குருதிநெடி

குருதிநெடி


செவிவழிச்செய்திகள்
அலைபேசி அலறல்கள்
புகைப்பட ஆதாரங்கள்
அச்சிட்ட நூல்கள்
காணொளிப் பதிவுகள்
தொலைக்காட்சித் தொகுப்புகள்
மொழிப்பெயர்ப்புப் பதிப்புகள்
எல்லாம் குருதிநெடி குறையாமல்
எங்கள் முன் இருந்தன
நேற்று.


எல்லாமும்
எங்களின் முன்
நிகழ்ந்து முடிந்தன
முந்தினநாள்.

அழவும்
ஆதாரங்கள் தேவை என்றோம்.

ஆதாரத்தேடலில்
ஆத்மசோகம்
அழிந்துப்போயின.

எங்கள் வலிகளும்
பலமானவன் சொன்னால்தான்
உணரமுடியும் என்றாகிவிட்டன இப்போது.

காகிதங்களைப்
புரட்டிக்கொண்டு
கருத்துச்சொல்ல முனைகின்றோம்
மனிதம் செத்துப்போயிருந்தது.

சாவுகளுக்கு அழலாம்
காவுகளுக்கு?

நன்றி : தாமரை