உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

மானமிழத்தல்

மானமிழத்தல்


எல்லோரின்
பேச்சுகளும், வசவுகளும்
அழுகைகளும், விம்மல்களும்
முனகல்களும், உளரல்களும்
என் சுவற்றில்பட்டு
எதிரொலித்துக்கொண்டிருதமையால்
அமைதியற்றே
காட்சியளித்திருக்கின்றன
என்
இருப்புகள்.

இவற்றுக்காய்
சண்டியிடுவதோ
நட்புகளைத்துண்டித்துத்
தனித்திருப்பதோ
அநாகரிகமென
சகித்திருத்தலில்
வளரத்தொடங்கியதென்
பெருந்தன்மை.

நேற்று
என் முகத்தில்
உமிழப்பட்ட
எச்சில்களுக்கும்
எதிர்ப்புக்காட்டவோ
ஆத்திரப்படவோ
முயற்சிக்காமல்
கடந்துப்போகிறதென் காலம்.

ஆம்
மானமிழத்தலின்
மறுப்பெயர்
நாகரிகம்.

நன்றி : தாமரை