உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இயங்குதல்

தோட்டத்திலிருந்து
பிடுங்கியெடுத்து இடமாற்றபட்ட இளஞ்செடியின்
வாட்டத்தை போல
தாய் மண்ணிலிருந்து
நாடுகடந்து வாழ்கிறவனுக்குமுண்டு.

பொழுது போக்கோ
பொதுநல சேவையோ
சொல்லிக்கொள்கிற நோக்கமெதுவென்றாலும்
இயக்கங்களாகிவிடுவதிலொன்றும்
குறைவைப்பதில்லை.
நாங்கள்.

மொழியென்பது இனத்தின் முகமென்றாலும்
எல்லா இயக்கத்திலும்
''தமிழ்'' உண்டு
பெயரின் முன்னாலோ
பின்னாலோ
அல்லது நடுவிலோ.!