உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

விசாரிப்பு

எப்போதோ
ஓர் அவசரச் சூழலில் அறிமுகமானவர்களும்
மிக நெருக்கமாகவும்
நெகிழ்வாகவும் விசாரிக்கிறார்கள்
சில ஆண்டுகள்
இடைவெளிக்கு பிறகான சந்திப்புகளில்.

நிறைய நிறைய
பேசுகிறார்கள்
விவாதிக்கவும் செய்கிறார்கள்
முன்பெல்லாம்
முகங்கொடுத்தும் பேசத் தயங்கியவர்கள்.!

இப்போதும் கூட
பேசவும்
விசாரிக்கவும்
என்னிடம் எதுவுமிருப்பதாக தெரியவில்லை
அவர்களுக்கு

துபாய் சென்றுத் திரும்பிய
செய்திகளை தவிர.!