உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தொடர்

நாட்டுக்குள் புகுந்தவர்கள்
வளத்தையும்
பின் வாழ்வையும் சூரையாடினார்கள்.

குடும்பத்தவர் பிழைத்திருக்கவேண்டி
கடல் கடந்து
கூலிகளாகி தனிமையில் தவிக்கிறோம்
நாங்கள்.

உறவுகளென்று
ஒருவரும்
தப்பித்திருக்காதபடி
ஊர் புகுந்து சூரையாடிவிட்டாயே
கடலே.!
#

சுனாமியின் போது எழுதியது