உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கையடக்கம்

தொடர் பணிகளுக்கிடையில் கிடைத்த
ஓய்வு நேரமொன்றில்
கை எடுத்து பிரிக்கிற
புத்தகத்தின் பக்கங்களை மேயாமல்
கண்
இமைகளினுள் பதுங்கி மறையும்.

எழுத்துகளாலான தாள்களை
அறிவாக்கிட
முயன்று
முயன்று தோற்றயர்ந்த மூளை
களைத்துறங்கும்.

பாவம்
புத்தகமொன்றை சுமந்தபடி
கை!