உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நன்றிக்கடன்

காலை
இரண்டு இட்டிலி ஒரு தேனீர் என
பசியாற்றும் காசை
மிச்சம் செய்தே
திரையரங்கு சென்று படம் பார்க்கிறோம்

கூடுதல் நேரம்
மகிழ்வுந்தோ கழிவறையோ தூய்மை செய்த
காசை சேமித்தே
ஒலி நாடாவோ
ஒலி ஒளி குறுந்தகடோ வாங்கித் தீர்க்கிறோம்.

கடன்
அடைப்பதற்கென்று வந்தாலும் கூட
கடன் வாங்கி
அரங்கு நிறைத்து
கொட்டி தந்து மகிழ்ந்திருக்கிறோம்.

அப்படியிருந்தும்
எதுக்கு
திரைப்படத்துக்கு தமிழ்
என்று தான் குலைக்கிறது
நட்சத்திர நாய்கள்!