வெறித்த பார்வையில் வார்த்தைகளின்றி
விழிநீர்வழி கரையும்
இணையின் இணை காணுதற்கான
ஏக்கம்.
அடையாளச் சந்திப்பிற்காக
காத்துக் காத்து
கானலாகிப் போகும்
வாரிசின் எதிர்பார்ப்பு.
பேசிப் பேசி இரவுகளைத் தின்ற
நிகழ்வுகள்
திரும்பும் நாட்களுக்காய்
தாகித்திருக்கும்
நட்பு.
எதையும் மறக்கவியலா மன வேதனைகளோடு
உயிர்த்தலுக்கான நகர்தலில்
ஆறுதலாய்
அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு
பாலை
மணல் பேச்சு.