உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அந்நியம்

கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்

ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன் நெடுநேரமாக

வீடு நுழைந்த மகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்கையில்

'யாரும்மா.. இவங்க?! என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்

(ஆனந்த விகடன் - பவள விழா கவிதைப்போட்டி - முத்திரை கவிதையாக வெளிவந்தது)