உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கோணல் மனசு

சோமாலிய சோகம்
கொசோவா கொடுமை
உகாண்டா பசி
உலகின்
பசித்த தேசங்களின் நிலைகளைக்
கேட்டு
படித்து
ஆராய்ந்து...ஆராய்ந்து
எல்லோரிடமும்
வாய்கிழிய பேசத்தான் செய்கிறேன்
வறுமை
தீர்க்கும் வழிகள் பற்றி.

கொஞ்சமும்
வெட்கப்பட்டதேயில்லை நான்
பயணப்பாதைகளில்
வற்றிய வயிறோடு கையேந்தும்
உயிர்களிடம்
உதடு பிதுக்கி நடக்க.!