துபாய்
சபகா சாலையின் நெரிசலில் நுழைந்து
பயணிக்கையில்
தூரத்திலிருந்து
பார்க்கும் பார்வையில்
தீவிர தேடலுக்குப் பின் கிடைத்துவிட்ட
தோழனைக் காணும்
கனிவு.
நெருங்கிய நிமிடத்தில்
அன்புருக
விசாரிக்கும் விசாரிப்பில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த
உயிர்
உறவின்
குழைவு.
இப்படியான
அறிமுகத்திற்கு பின்னும்
விலகிச் செல்லாமலோ
கோபப்படாமலோ இருக்க முடிவதில்லை
அவனிடம்
நாகூசாமல்
'சின்னவயசு பொண்ணு..
வேணுமா..?' என்கிற போது.