யாருக்கும்
வாய்க்காதது தான்
ஊடகங்கள் பரிந்துரைக்கும்
எல்லாவற்றையும்
வாங்கி
பயன்படுத்தி வாழ்வதென்பது
கூடுதல் சிரமம்
கூலித்தொழிலாளியாக கடல்கடந்தவனுக்கு.
மீண்டும்.. மீண்டும்
தொலைத்தெடுக்கிற
விளம்பர யுக்திகளுக்கு பலியாகிவிடாமல்
நாமிருக்கலாம்
நம்மைச் சார்ந்தவர்கள்..?
விளம்பரங்களெதையும்
நம்பாமல்
வாழக்கோரும்
விளம்பரமொன்றை எடுத்தளிக்க
யாரும்
வரமாட்டார்களா?