உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பயணம்

மரத்தக் கண்ட எடம் எதோ
கால தூக்கன கதயா
வந்தாச்சி
காசுப் பணம் எடைக்குமுன்னு,
மூச்சுப்புடிச்சி
நகத்திதான் ஆவணும் மூனுவருசம்
கடன ஒடன அடைக்க.!

கூட்டம் கோசமுன்னு சுத்தனவனுக்கு
இன்னும் கொஞ்சம் செரமம் தான்.
வாயக்காட்டி
வவுத்தக்காட்டி
மிரட்ட ஆளா இல்ல
அடக்கித்தான் வாசிச்சாவனும்
வந்த எடத்துல.

அப்பறம்
பொட்டிகட்ட காசுப்பணம் சேத்து
விமானச் சீட்டுக்காக
அங்க இங்க நின்னு
உறுதிப்படனும் ஊர் திரும்பரத்திட்டம்.

இதுல மொதலாளி கொடுத்த மூனுமாசம்
விடுப்பாச்சம்
சந்தோசமா கழியுமாங்கற கவலதான்
எனக்கு
ஒவ்வொரு பயணத்தின் போதும்.