நீண்ட நாட்களுக்குப்பின்
உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்
நேற்று.
பக்கமெல்லாம்
என்றோ அறிமுகமான சொற்கள்
ஒவ்வொரு சொல்லும்
யார் யாரையோ நினைவூட்டுகின்றன.
நலவிசாரிப்புகள்
அறிவுரைகள்
உடல்நல ஆலோசனைகள்
இன்னும் என்னென்னவோ
எல்லாமும் எழுதியிருந்தீர்கள்
எல்லோரையும் போல.
ஆயினும்..ஆயினும்
அம்மா
உன்
கண்ணீர் துளிகள் பட்டுப்பட்டு
அழிந்திருந்த சொற்கள்
புதுப்புது
பொருள்களைச்
சொல்லிக்கொண்டிருகின்றன எனக்கு.