உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

முடிதிருத்துபவரும் மரணமும்

முடிதிருத்தகத்துள்
காத்திருப்பு தெரியாதிருக்க
கைத்திணிக்கப்பட்ட புத்தகத்தை
புரட்டி
மேலோட்டமாய் வாசித்து
ஆழ்ந்து படிக்கிற நேரம்

'முடிஞ்சிடிச்சி வேல..
நீங்க வந்து வக்காருங்க..'
முடிதிருத்துபவரின் அழைப்பு
புத்தகத்தொடர்பை வெட்டிவிடுகிறது.

மரணமும்
இப்படி தான் முடித்துவிடுகிறது
வாழ்வை.
பிறந்து
வளர்ந்து
புரிந்து வாழ முயலும் போது.