பூங்கா
அருங்காட்சியகம் இவை மட்டுமின்றி
இப்போது புதிதாக
வெளிநாட்டு பறவைகள்
வந்திருக்குமிடம் பற்றியும்
சொல்லிச் செல்கிறார்கள்
பார்த்து வந்தோர் பலர்.
செய்தி தாள்களும்
வண்ணப்படங்களுடன் கதைவிடுகின்றன
சுற்றிப்பார்த்தலின் சுகங்கள் பற்றி.
எனக்கும்
இல்லாமலில்லை
சென்று பார்க்கும் ஆசை
விரும்பியபடி
சென்று
பார்த்து ரசித்து திரும்ப
ஒப்பந்தக் கூலிகாரனுக்கும்
வாய்க்க வேண்டும்
பறவைகளைப் போல
சுதந்திரமான
வாழ்க்கை.