“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்
தேவை
அடையாளங்களை இழந்தோ அவமானங்களைச் சுமந்தோ பணம் பார்க்கிற பாக்கியம் பெற்றதாகிவிட்டது என் தலைமுறை தீவிர அறிவுத்தேடலின் பலனாக.
திர்ஹத்தோடு கொசுறாக கொஞ்சம் வாழ்க்கை கிடைத்தால் நலம்.!