உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

முடிவு

முடிவு


‘என்ன தோழர்..
துபாய் வாழ்வு
எவ்வளவு காலம்தான் போகும்’ என்றார்
எதிர்காலம் குறித்த கவலையோடு
நண்பரொருவர்.

‘இந்த ஒரு பயணம்
சென்று திரும்பியதும்
இங்கேயே
தங்கிவிட திட்டம்’ என்றேன்
முந்தைய பயணங்களின் போது
சொல்லிச் சென்றதை போல.

என் தனி வாழ்வின் முடிவுகளும்
என்னால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை
எப்போதும் எதிலும்.

ஒரு பலி ஆட்டை போல
நகர்த்தக் கற்றுக்கொண்டேன்
நாட்களை!