உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தூரப்பார்வை

தூரப்பார்வை


ஈரப்பசை
தவரப் பச்சை
இப்படியெவற்றுக்கும் வாய்ப்பெதுவுமற்ற
பாலை
மணல் பரப்பில்
மண்முட்டி
உயிர்த்து
வளர்ந்து
விண்ணைத் தொட்டு நிற்கும்
ஒற்றை
மரம்.

பார்க்க
ரசிக்க
அழகு
அற்புதம்
இடைவெளி விட்டு நிற்கும்
இன்பச் சுற்றுலா கண்களுக்கு.

வெறுமையும்
வலியும்
அஃறினை மரத்திற்குமுண்டு
தாய்மண் துறந்த
அகதியின்
ஆறா ரணவேதனைகளைப் போல.