உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அடமானம்

அடமானம்

நள்ளிரவுகளில்
மின்னும் விளக்கொளிகளுக்கிடையில்
அரைக்குறையாய்
கண்டு ரசித்த
அவளின் ஆட்டங்களை மெச்சி
கடன் வாங்கி
வாங்கிப் போட்ட தங்கச் சங்கிலி

துபாய் பயணத்திற்காக
மார்வாடி கடை அடமானத்தில்
மூழ்கிப் போன
மனைவியின்
தங்கக் கருகமணியை
நினைவூட்டியிருக்குமா அவனுக்கு!