உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஆப்புகளுக்கு பகிரங்க அழைப்பு

ஆப்புகளுக்கு பகிரங்க அழைப்பு

சமீபத்தில் என் நண்பரும், வலைப்பூக்களில் தீவிரமாக இயங்கி வருபவருமான முத்துகுமரன் ஒரு செய்தியை சொன்னார். ஆப்பு என்னும் பெயரில் எழுதும் வலைப்பூ நண்பர் நேசகுமார் பற்றிய ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அதில் என். சொக்கன் தான் நேசகுமார் என்றும் சொக்கனுக்கு உதவுபவர்கள் என்று ஒரு பட்டியலையும் தந்துள்ளார். என்பது தான் முத்துகுமரன் எனக்கு சொன்ன செய்தி..
கீழே அவரின் வரியிலேயே செய்தி
‘’திட்டமுடியுமோ அந்த அளவுக்கு திட்டிவிட்டு அவர்கள் காசிலேயே சாப்பாடு வாங்கிச் சாப்பிட பாப்பான்களால் மட்டும்தான் முடியும். என்ன நான் சொல்வது புரியவில்லையா? சொக்கன் அடிக்கடி தன்னுடைய கம்பெனி சம்பந்தமாக வளைகுடா நாடுகளுக்கு செல்வார். அப்போது அங்கே இவருக்கு சவுதிஇ துபாய்இ ரியாத் பகுதிகளில் அனைத்து உதவிகளையும் செய்வது யார் தெரியுமா? 99மூசதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அதிலும் குறிப்பாக இசாக்இ ஷாஜஹான்(நண்பன்)இ கவிமதிஇ ஆசிப்மீரான்இ அபுல் கலாம் ஆசாத்இ கேவிராஜா போன்றவர்கள் முக்கியமானவர்கள்.’’

மேலே குறிப்பிட்டிருப்பது போல சொக்கனுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதாலும், என்னை அறிந்த அனைவரும் அறிவார்கள் என் கொள்கை கோட்பாடு செயல்பாடுகள் அனைத்தையும் என்பதாலும் இது போன்ற முகவரியற்றவர்களின் கருத்துக்கு விடையளிக்க வேண்டாம் என்பதாலும் அமைதியாக இருந்தேன்.

சமீபத்தில் சொக்கனிடமிருந்து வாந்திகளை நம்பவேண்டாம் என்ற மின்னஞ்சல் கிடைத்தது, அவர் நடத்திய தினம் ஒரு கவிதை குழுமம் மூலமாக. அதன் பின் இந்த அறிவிப்பை தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் என் இயக்கம் தொடர்புகள் பற்றி விரிவாக பிறகு எழுதுவேன்.

முதலில் ஆப்பு தன் முகத்தை வெளியில் காட்ட வேண்டும்.
முகவரி மற்றும் தொடர்பு எண்களை வெளியிட வேண்டும்

அப்படி வெளியிட தவறினால் அவர் பொய்யர் என்பது உறுதியாகும்

என்னைத் தொடர்புக் கொள்ள ishaqi74@yahoo.com அலைபேசி: 00971 50 4804113