உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சுமைதாங்கி

சுமைதாங்கி

சொந்த சோகம் சொல்ல
ஆதரவாய்
காதுகள் கொடுத்து கேட்க
என்
மனச் சுமைவாங்கி
ஆறுதல் சொல் உதிர்க்க
குடும்ப குறைகள் கேட்டு
களையும் வழிகள் சொல்ல
கவலையற்று
அள்ளக்குறையாத அன்புகளால் நெய்த
தோழமையொன்று தேவை.

கவனிப்பாரற்ற
உயிராக உலாவருகிறேன்
துபாய் தெருக்களில்,

பெருநகரத்து
முழுநிலவை போல.