உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சதாம்
நீ வாழ்ந்த காலத்தில்
இராக்கியருக்கு மட்டும்
அதிபராக இருந்தாய்

நீ
தூக்கு மேடையில்
துணிச்சலாக நின்ற நிமிடம்
இதயமுள்ள
உலக மாந்தரின் உள்ளத்தில்
நிரந்தர அதிபரானாய்.

எதிரிகள்
உன்னை
புதைத்துவிட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆயிரமாயிரம்
சதாம்கள்
முளையப்போவதை
அறியாத மூடர்கள்.