உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கழிவறை கிறுக்கல்

கழிவறை கிறுக்கல்

ஒவ்வாமைதான்
ஒவ்வொரு முறையும்
நவீன பொது கழிவறைக்குள் நுழைவது.

மூக்கை மட்டுமல்ல
கண்களையும் மூடிக்கொண்டே
நுழைய வேண்டியிருக்கிறது அதனுள்.

பேருந்து நிலையம்
தொடர்வண்டி மட்டுமல்ல
துபாய்
பொது கழிவறைகளும் அப்படியே
கிறுக்கல்
மொழிகள் வெவ்வேறுதான்
உணர்த்தும் பொருள் ஒன்று.

சொல்லும்
ஓவியமுமாய்
மிரட்டுகிற பொது கழிவறைகளுக்கு
போகாமல் இருந்துவிடலாம்

என்ன செய்யமுடியும்
வரவேற்பறைக்கு வந்துவிட்ட
கழிவறை சுவர்களான
தொலைக்காட்சிகளை.!