உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஆசிப் மீரான்.... என்ன ச்சீப் மீரானா?

ஆசிப் மீரான்.. என்ன ச்சீப் மீரானா?


அன்பு உடன்பிறந்தார் ஆசிப் மீரான் மீது
எனக்கு எப்போதும் கூடுதல் அன்பும் மரியாதையும் உண்டு,
அதே போல
அவருக்கும்
என் மீது அன்பும் மரியாதையும் உண்டு.
இருந்தாலும் அவரின் சமீபத்திய பதிவு
எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

இந்த வருத்தத்திற்கு காரணம்,
நடிகை நயன்தாரா பற்றிய பதிவுதான்.
இப்படியான பதிவுகளை
எதை சாதிக்க போடுகிறார்
என்று புரியவில்லை.
ஏற்கெனவே
அண்ணன் பாமரன் அவர்களின்
கட்டுரை தலைப்பை பயன்படுத்தி
நடிகை கு~;பு படமொன்றை வெளியிட்டார்.
இப்போது நயன்தாரா படம்…

இப்படியான பதிவின் நோக்கம் என்ன..

அவருக்குள் வளர்ந்து வரும்
நகைச்சுவை உணர்வுக்கு உணவா..

பரபரப்பை விரும்பும் பதிவர்களுக்கு உணவா..


நல்ல நண்பர் ஆசிப் மீரானின்
இப்படியான பதிவுகள்.
மோசமானவர்களுக்கு ஊக்கமாகவே அமையும்.

வர..வர.. மாமியார் கதையாக..
என் ஆசிப் மீரான்..
ச்சீப் மீரானாக மாறுகிறாரோ?
என்ற அச்சம் எனக்குள்ளது.
அதை நீக்கவேண்டிய கடமை என் ஆசிப்க்கு உள்ளது.

ஆசிப் மீரானுக்காக இந்த பதிவில் மட்டும் பின்னூட்டம்
அனுமதிக்கப்படுகிறது.