உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தோழி நளாயினி பார்வை

என் அன்பிற்குரிய தோழி நளாயினி சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக...
அத்துனை அன்பு பொங்க என் பதிவில் உள்ள கவிதைகள் பற்றி பேசினார். மகிழ்ந்தேன்.. பின்னூட்டம் அனுமதிக்கவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். நீங்கள் உங்கள் கருத்துகளை தனி மடலில் அனுப்புங்கள் தனி பதிவாகவே வெளியிடுகிறேன் என்றேன்.. அவர் நினைவில் இருந்தவரை எழுதி அனுப்பியுள்ளார்...

அக்கடித்தத்தை அப்படியே இங்கு பதிப்பித்துள்ளேன்
இது என் தோழி நளாயினியின் கருத்துக்கு மரியாதை.

சதாம் கவிதை.

இன்றய எமது போராட்டம் குhட இப்படியானதைத்தான் சாதித்திருக்கிறது. மின்கம்பத்தண்டனை என்று கொடுக்க முனைந்து பலரை பரம்பரை எதிரிகளாக்கி வைத்தள்ளது.தனித்து புலிகளை குhறிவிடமுடியாது . எல்லா இயக்கங்களும் செய்து விட்ட மாபெரும் தவறு ஈழத்து மின்கம்ப தண்டனைகள். அவை இப்போ பல்கிப்பெருகி யார் செய்வது யாரை செய்வது என தெரியாமல் ஏரிகள் குளங்கள் நடு வீதி என வெள்ளை வான் கடத்தல் என நடந்த படிக்கே உள்ளது. சதாமுக்கு மரணதண்டனை கொடுத்ததை தொலைக்காட்சியில் தான் செய்தியாக பாற்க நேர்ந்தது. மிகவும் வேதனை அடைந்தேன். அப்போ நான் Nஐமனியில் எனது அண்ணாவீட்டில் நின்றேன். என்னை இன்றும் ஊரில்வாழ்ந்த காலத்து மின்கம்ப தண்டனைகள் கனவில் பயமுறுத்தும். அNது போலவே சதாமினுடைய மரணதண்டனையும் கனவில் ஒரு முறை வந்து போனது. எனது ஆரம்ப பாடசாலையின் மைதானத்தில் தூக்குத்தண்டனை கொடுப்பதாக கனவு கண்டேன். தொண்டை நெரித்து மூச்சு திணறும் சத்தத்தை என்னால் கனவில் உணரமுடிந்தது. கொஞ்சநாளா ஒரே பயமாக இருந்திச்சு.

அடிமையின் பெருமை கவிதை.
முதலாளித்தவ வளற்சியின் பாதிப்புதான் இவை எல்லாம்.

சுமைதாங்கி. கவிதை.
பெருநகரத்து முழுநிலா என கூறி உள்ளீர்கள். பெரு நகரத்தில் இயந்திரத்தன வாழ்வு தானே. நிலாதானே இயந்திரதனவாழ்வாகிப்போன மனிதருக்கு ஆறுதல் தருகிறது.

துணையிளந்தவளின் துயரம்.
இந்த கதை தான் எங்கள் ஊரிலும். இத்தகைய வாற்தைகளை எல்லாம் நிலத்தில் இருக்கும் போது குண்டியில் மண் ஒட்டும் என்பார்கள்.அதை எழும்பும்போது தட்டிவிடுவார்களாம். தட்டிவிடும் போது சேர்ந்திருந்து கதைத்தவர்கள் கண்ணிலோ வாயிலோ போய் விழுமாம். அதைப்போல விட்டிடவேண்டியது தான். ( பலர் இருந்து குhடிக்கதைப்பது. அதில் ஏதாவது பிடிக்காவிட்டால் யாரோ ஒராள் அந்த இடத்தை விட்டு முதல் எழும்புவாராம்.அதனால் தான் சோஇந்திருந்த கதைப்பவர் வாயிலோ கணஇணிலொ போய் விழும் என குhறினேன்.) ஆனாலும் அதை கவிதையாக்கிய தைரியம் உங்களுக்கு.

அடமானம்.-
யதாற்தத்தை குhறும் கவிதை. இறுதியில் மனதை நெகிழவைத்துவிட்டது.

தூரப்பார்வை.
நான் கூட புகைப்படம் எடுக்கும் போது தனிமரத்தை தேடுவதுண்டு. அழகு தான் தனிமரம்.ரசனைக்கு. ஆனால்தனிமரம்; தோப்பாகாதே. தோப்பென்றால் தான் குயில் கூவும் மயில் அகவும். காகம் கரையும். தென்றல் தவழும் நிலா ஒளிந்து ஒளிந்து நாணி முகம் காட்டும்.அதே போலத்தான் நாமும். தனித்தவர்களாக்கப்பட்டு விட்டோம். ஒரு கட்டாக விறகு கட்டு இருக்குமாம். எபஇபிடி தூகஇகிப்போட்டாலும் குலையாது. அதிலை இருந்த ஒண்டு ரண்டு விறகுகளை எடுத்தா கட்டு குலைஞ்சிடும். அப்பிடித்தான் நாமெல்லைம் குலைந்து போய் வாழ்கிறோம். தனித்தனித் தீவுகளாக.

அவ்வளவு தான்.-
நாமல்லவா காலத்தை தின்று கொண்டிருக்கிறோம். காலம் நம்மை தின்னவில்லையே. நாம்தான் முயற்சிகளையும் மன்னேற்றப்பாதைகளை உருவாக்காமல் வலிகளையும் ரணங்களையும் சுமந்தபடி செல்கிறோம். காலத்தை போய் குற்றம் செல்லலாமா?

முடிவு.
நிலா எப்படி பலியாடாக முடியும். ( சுமைதாங்கி கவிதையை வாசித்து கருத்த சொன்னதால் இதை சொல்கிறேன்.)

விலகல் கவிதை.
தலாக் நாலினதும் கலவை. இங்கு தானே வாழ்வையே கற்க தொடங்குகிறோம்.

துபாய்.
தெரியுதெல்லா. பிறகென்ன.

வெளிச்சம்.
அடாh நல்ல கவிதை-

முடிதிருத்துபவரும் மரணமும்
சரியாக சொன்னீர்கள்.

அழுத நினைவு-
அழிந்த சொற்களும் ஆயிரம் நினைவுகளும். அப்பா.. மறு பிரசவம். என் ஆசை மகளுக்கு.

கவிதை தான் எழுதுவீங்கள் எண்டு பாத்தா மற்றவர்களை நல்லா அழவைக்கவும் தெரியுது

கையசைப்பு.
இங்கு திருமண கொண்டாட்டம் நடக்கிற போது காரின் பின் ரின்கட்டி கார் கோன் எல்லாம் அடித்த பெரிய ஆரவாரமாக காரில் ஊர்வலம் போவார்கள்.வெள்ளையர்கள். நான் அந்த நேரம் வீதியில் நிற்பவர்கள் எல்லோரும் கையசைத்து கைதட்டுவார்கள். நானும் பல திருமண வெள்ளைக்காரரின் ஊர்வலங்களை பாற்து கையசைத்திருக்கிறென். பறக்கும் முத்தம் குhட கொடுத்திருக்கிறேன். அப்போது எனக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்கும். காரணம் நமது திருமணம் எனதுஇரத்த உறவுகளே இல்லாமல் சுவிற்சலாந்தில் நண்பர் நண்பிகள் சூழ நடைபெற்றது .

நட்பாட்டம்.
என்னதான் நாங்கள் குத்தி முறிஞ்சாலும் கடைசியில் அம்மா அப்பா சகோதரர்கள் தான். ஆக இறுதிக்காலத்தில் கணவன் மனைவி மட்டும் தான். இது தான் வாழ்வனுபவம்.

தாடி.
வாசித்து விட்டு சிரித்தேன்.

எங்க வீடு.
மனசு கனத்துவிட்டது.

அறிமுகம்.
நான் ஒரு கவிதையில் எழுதி இருக்கிறேன். விடுதலை உணர்வை மென்று தின்று மனித நேயம் வளற்துக்கொள்வேன் என. அதே போல இன்னொரு கவிதை எழுதி இருக்கிறேன்.

மனிதநேயம் மன்னித்து மன்னித்து தன்னை துன்புறுத்தும்.

இவற்றை அவற்றில் எழுத முனைகிறேன். காரணம் பொங்கு தமிழுக்கு போக கணணி நிண்டாலும் எண்ட பயம். அதாலை முழுக்க எழுதிமுடிச்சிட்டு எழுத முனைகிறேன்.

அன்புடன்
நளாயினி