உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வள்ளலாயிருத்தல்

வள்ளலாயிருத்தல்

பெயரெடுக்கவே
பெரும் போராட்டம் நடக்கிறது
வாழ்நாளில்.

நல்லவனென்று
பெயரெடுத்தல் முக்கியம்
நல்லவனாய்
வாழ்தலைவிடவும்.

வள்ளலென்று
பிரபலமாதல்
முதலாளிகளுக்கு மூலதனம்

பணம் படைத்த முதலாளிகள்
அமைப்பொன்றையும்
நிறுவ வேண்டியிருக்கிறது
அள்ளி அள்ளித் தரும்
வள்ளலென
பிரபலமாவதற்காக.

முதலாளிகளின்
வள்ளல் தனங்கள்
அவ்வப்போது அரங்கேறுகின்றன
சூடு பறக்க

பணியாளர்களின்
வயிற்றெரிச்சலால்