உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

விடுதலை பெற்றவராவீர் - மாவீரன் சதாம் உசேன்

பலரின் இறுதி நிமிடம் என் தூக்கத்தை தின்றுள்ளன. அப்படியான நிகழ்வின் சமீபத்திய ஆதாரம் மாவீரன் சதாம் உசேன். சதாம் அவர்கள் பயங்கரவாத அமெரிக்காவின் பினாமி சிறையில் இருந்த சூழலில் கடைசியாக எழுதிய கவிதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.. அக்கவிதையை நண்பர்களுக்காக..

விடுதலை பெற்றவராவீர்.

மாவீரன் சதாம் உசேன்
#
உன் ஆன்மாவின்
கட்டுகளை அவிழ்த்துவிடு.
என் ஆன்மாவின்
இணையும் துணையும் நீ.

உன்னைப்போன்று ஓராலயமும்
என் இதயத்திற்கு மேல்
கூரை எழுப்பவில்லை
நாந்தான் அந்த வீடானால்
அதன் மீது பெய்து விழும்
பனித்துளியாய் நீயிருப்பாய்.

ஆறுதலின்
குளிர்த் தென்றல் நீ.
உன் அருகாமையினால்
என் ஆன்மா உற்சாகமயமானது.
வலுவான நமது 'பஅஸ்' கட்சியின்
கிளைகள் போன்று.

எதிரிகள்
அவர்களது இரகசிய சூழ்ச்சிகளாலும்
சதித் திட்டங்களாலும்
உண்மையின் வெளிச்சத்தை
துச்சமாக்குதல் தொடர்கிறது
இது திமிரின்
இரகசிய திட்டம்.
இது அவர்களது தோல்வியையல்லாமல்
வேறு எதையும் தெளிவுபடுத்தவில்லை
நாம் அதை வலுவான இறை பக்தியினால்
தகர்த்துத் தூள்தூளாக்குவே செய்வோம்.
பாவங்களால் நுகரப்பட்ட
ஒரு பாவியைப்போல.

நாம் ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம்
தர்மத்தைக கடைப்பிடிப்பதில்
நாம் வலுவானவர்கள்
நம் ஆன்மாவின் துணை
உயர் குணமும் மரியாதையுமாகும்.

ஓநாய்களுக்கு முன்
நம் விரித்த மார்புகளைத்
திறந்து காட்டுவோம்.
மிருகத் தன்மைக்கு முன் நாம் பதறமாட்டோம்
எந்த கடின அறைக்கூவலுடனும்
நாம் கடுமையாகப் போர் புரியத்தான் செய்வோம்
இறைவன் அருள்புரிந்தால்
நாம் அவர்களைத் தோல்வியுறச் செய்வோம்
நமது ஆற்றலுக்கு முன்
அவர்களால் என்ன செய்ய முடியும்.?

அன்பிற்கினிய எனதருமை மக்களே!
நாம் எப்போதும் வீழ்ச்சியுறமாட்டோம்
எந்த ஆபத்துக் கட்டங்கலிலும்
நம் கட்சி நம்மை வழிநடத்திச்செல்லும்
உங்களுக்ககவும், நாட்டுக்காகவும்
நான் உயிரை அர்ப்பணம் செய்வேன்.
கர்ண கொடூரமும், கொடூரமான நாட்களில்
இரத்தம் எவ்வளவு துச்சம்.!
ஆக்கிரமிக்கப்படும் போது
நாம் மண்டியிடுவதோ,
தலைகுணிவதோ இல்லை.
ஆனால், எதிரியை நாம்
அவர்களுக்குத் தகுந்தவாறு
உபசரிக்கத்தான் செய்வோம்.!
#

தமிழில்: தோப்பில் முகம்மது மீரான்
நன்றி : சமநிலைச் சமுதாயம்.