உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சாலை என்ற தவம்

சாலை என்ற தவம்


இயங்குதல் என்பது
நகர்தல் மட்டுமா.?

சோர்ந்த மனசோடு
ஊர்கின்றார் சிலர்

புணி நிமித்தமாக
நடக்கின்றார் சிலர்

வெற்றிக் களிப்போடு
விரைந்து செல்கின்றார் சிலர்

தேவையின் போது
நடந்தோடுகின்றார் சிலர்.

அவசரம் கருதி
வேகமாகவும்
ஓடுகின்றார் சிலர்

ஊர்திகளிலிலும்
இப்படியான இயங்குதலுண்டு.

தாங்கிய தழும்புகள் சிரிக்க
ஏதுமறியாதது போல
அதிர்வுகளற்று
அப்படியே கிடக்கின்றன
சாலைகள்.