உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

'மதிப்பு" - மனிதம் - மனித உரிமை அமைப்பின் மாத வெளியீடு

'மதிப்பு" - மனிதம் - மனித உரிமை அமைப்பின் மாத வெளியீடு
"சமமான 'மதிப்பு"ம், உரிமையும் மனிதகுலத்தின் பிறப்புரிமை" - மனித உரிமைக்கான உலகப் பிரகடனம்
மனிதம், மனித உரிமையையும், சுற்றுச்சூழழையும் பேணி பாதுகாக்கும் ஓர் உன்னத பணியினை ஏற்றுக் கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக எந்த ஒரு பிரதிபலனை யாரிடமும் எதிர்பார்க்காமல், இதனுடன் இணைந்துள்ள அனைவரும் முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ பணியாற்றி வருகின்றனர். மனிதத்தின் செயல்பாடு கண்டு, தானாக முன்வந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உறுப்பினர்கள், குறிப்பாய் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

மனிதத்தின் நோக்கமான மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பணியினை மக்களிடம் விரிவு படுத்தும் பொருட்டு, மனிதம் ஓர் மாத இதழ் தொடங்க எண்ணி 'மனிதம்' எனும் பெயரிலேயே கடந்த 2006 செப்டம்பர் மாதம் வெளி கொண்டு வந்தது. முதல் இதழின் வீச்சு மிக நன்முறையில் அமைந்ததால், இதழை தொடர்ந்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதழ் தொடந்து வரவேண்டுமானால், இந்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விழைவாய், மனிதம் முறையான அனுமதி கேட்டு விண்ணப்பித்து, தற்போது எல்லா விதிமுறைகளை பெற்று விட்டது.

மனிதம் அமைப்பு இனி 'மதிப்பு' என்ற பெயரில் மாத இதழ், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வரும் மே மாதம் முதல் வெளிகொண்டு வரும்.

'மதிப்பு'க்காக கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் உங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

'மதிப்பு' எவ்வித தடையுமின்றி தொடர்ந்து வர உங்களின் ஒருமித்த அதரவு எல்லா வகையிலும் எங்களுக்கு தேவை.

'மதிப்பு" இனி உங்கள் இதழ். அதை வளர்தெடுப்பது நமது அனைவரின் கடமை.

நன்றி.

மதிப்பு ஆசிரியர்,
அக்னி சுப்பிரமணியம்.