உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஒரு குடியின் பயணம்- திரையிடலும், வெளியீடும்

இசாக் நெறியாள்கையில் வெளியாகியுள்ள ஒரு குடியின் பயணம் குறும்பட திரையிடல் நிகழ்வும், குறுந்தகடு வெளியீடு நிகழ்வும் கடந்த 04-01-2008 அன்று துபாய் சிவ் ஸ்டர் உணவக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் மீரா.அப்துல் கதீம் தலைமை தாங்கினார், கவிஞர் கவிமதி வரவேற்புரை ஆற்றினார்.



குறும்படம் பற்றிய கருத்தை கவிஞர் நண்பன் பகிர்ந்துக்கொண்டார் பிறகு குறும்படத்தின் குறிந்தகடை தொழிலதிபர் எஹ்யா வெளியிட முதல் படியை மருத்துவர் இராசரத்தினமும் , சமூக பணியாளர் லியாக்கத்தலியும் பெற்றுக்கொண்டனர், தொடர்ச்சியாக அமீரகத்தில் உள்ள தமிழ் இயக்க நண்பர்கள் பெற்றுக்கொண்டனர்.

பின் குறும்படம் திரையிடப்பட்டது.