உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தனிமை

என்னைப் பற்றிய
முன் முடிவுகளோடு பேசத் தொடங்குகிறீர்கள்
நீங்கள்

என் நிலைமையின் முனையளவும்
அறிந்துக் கொள்ள
ஆர்வமற்றவர்களாகவே
தீர்ப்பெழுதவும் துணிகின்றீர்கள்

பிரிந்திருக்கும் பெரும்சோகம்
உணராத உங்களின்
சொற்களை பொருளற்றதாக
புறந்தள்ள நினைத்தாலும்

தவறிழைக்காதவனுக்கு
எதிரான
உங்களின் சொற்களால்
என் மனம்
அமைதியிழந்து தவிக்கிறது
அமெரிக்கன்
புகுந்த இராக்கை போல