உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஞாநி மீது பாயும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இணைய உலகில் உணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ளும் நோக்கில்,
தமிழர்களுக்கு எதிரானவராக மாறிவிட்ட முன்னாள் மனிதன் ஞாநி அவர்களை விமர்சித்து பதிவுகள் இடும் தோழர்கள் அன்பு கூர்ந்து விமர்சனம் எழுதும் போதும், அதனை தட்டச்சு செய்யும் போதும் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள்.

பதிவை இடும் முன் அவசியம் படியுங்கள்...
காரணம்..
பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களை நீங்கள் விமர்சித்து எழுதினாலும் உங்கள் கவனகுறைவால்
ஆய்வாளர் கோவை ஞானி அவர்களை குறிக்கும் வகையில் தங்கள் தட்டச்சு அமைந்து விடுகிறது.

நிறைய நண்பர்கள் ஞாநி என்று எழுதாமல் ஞானி என்றே எழுதுகிறார்கள்..

நண்பர்கள் அவசியம் திருத்திக்கொள்ள வேண்டும்

நீங்கள் கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் உங்கள் கருத்து முறையாக யாரைப்பற்றி உள்ளதோ அவர்களை சென்றடையும்.

நண்பர்களே கவனம் தேவை