உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அன்புடன் அழைக்கிறேன் அனைவரும் வருகஅன்பிற்கினிய தோழருக்கு

எனது ''மழை ஓய்ந்த நேரம்''
அய்க்கூ தொகுப்பைத் தொடர்ந்து
சமீபத்தில் எழுதியுள்ள
''மௌனங்களின் நிழற்குடை''
என்னும் கவிதைத் தொகுப்பின்
வெளியீட்டு விழா வருகிற
22-08-2008 அன்று
துபாய்யில் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில்
நடைபெற உள்ளது.
விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
தங்களின் அன்பான வருகையையும்
ஆலோசனையையும் எதிர்நோக்கி..
அன்புடன்
இசாக்

மின்னஞ்சல்: ishaqi74@yahoo.com