உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

செருப்பென்ன செருப்பா?

செருப்பென்ன செருப்பா?

ஆண்டதாய்
பெருங்
கதைவிடப்பட்டு
இழிவின்
அடையாளமாய்
பழங்காலத்தில்.

அடிமை
வாழ்வின்
அடையாளம்
நேற்றுவரை.

வல்லரச ஆணவத்தோடு
உலகின்
மகிழ்வை
உலுக்கிக் கலைக்கும்
ஆதிக்கத் திமிர்
கிழிக்கும்
கூர் ஆயுதமாய்
காலணி
இன்று.

உலக மானமனிதர்களின்
சினங்களின்
குறியீடாய்
பு~;சின் முகம் நோக்கி
முன்தசர் அல் ஜைதி
வீசிய
காலணி
வெற்று காலணி அல்ல.