உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அவளுக்கு அவள் என்று பெயர்

அவளுக்கு அவள் என்று பெயர்

அவளின்
இளமைத்தமிழால்
காதல்
கவிதைகள் கிளைக்கும்.

அவளின்
ஈரப்பார்வையில்
காமப்
பயிர்கள் முளைக்கும்.

அவள்
இதழ்களின் பிரிவில்
சங்கத்
தமிழ் வந்து சிரிக்கும்.

அவள்
இடைவெளி சரிவினில்
சகாரா
பாலையும் சிலிர்க்கும்.

அவள்
பருவத்திமிரில்
உயிர்
விளைச்சல் பெருகும்.

அவளின்
புருவத்தேனால்
உடல்
களைத்தல் அருகும்.