உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தனிமை 2

5
அந்த மூன்று நாட்கள் பற்றியான
அங்கலாய்ப்புகளால்
நிரம்பி வழிகிறது பெண்களுலகம்
ஆண்டு முழுவதும் மூன்று நாட்களான
சோகத்தை
யாரிடம் சொல்லியழுவாள் அவள்.

6
பிரிந்திருப்பதென்பது
பெருமை தருவதன்றுயென்றாலும்
எவராலும்
இழப்பைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை
இயல்பிழந்துவிட்ட
நாகரீக உலகில்.

7
''அடிக்கடி தொலைபேசி செய்''யென்கிறாள்
''வாழ்க்கையில்
வேறு வேலையில்லையா எனக்கென்கிறேன்.

என்
தொலைபேசியால்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்பதுணராமல்.