உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அரபு நாடுகளில் நமது தமிழர்களின் சிக்கல்கள்

அரபு நாடுகளில் நமது தமிழர்களின் சிக்கல்கள்

அன்புள்ள இசாக், வணக்கம்.
வரும் 26 அன்று காலை அய்க்கிய அரபு எமிரேட் அரசின் பிரதிநிதி ஒரு சென்னையில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதில் மனிதவுரிமை சார்ந்த சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அன்று காலை அவர் தமிழக முதல்வரை சந்தித்தவுடன், எங்களை சந்திக்கவுள்ளார்.
அக்கூட்டத்தில் அரபு நாடுகளில் நமது தமிழர்களின் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. வேலையின் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், பாலியல் வன்முறைகள், ஏமாற்றப்படுதல் போன்ற அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இம்மாதிரியான பிரச்சனைகள் குறித்து தாங்கள் அனுபவம் மற்றும் பிற தமிழர்களின் துன்பங்களை எங்களுக்கு உடனே தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன். கூட்டத்தில் இதுபற்றி பேசி, நல்ல தீர்வுக்கு நம்மால் எடுத்துச் செல்லமுடியும்.
மின்னஞல் அல்லது எனது கைப்பேசியில் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அன்ப
அக்னி சுப்பிரமணியம்.
செயல் இயக்குநர், மனிதம்
manitham@gmail.com
--
www.manitham.net
manitham@manitham.net
கைப்பேசி : 91-94433 22543