உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அன்பும் ஆதரவும்
அன்பர்களே..
எனது முதல் முயற்சியான 'ஒரு குடியின் பயணம்' குறும்படம் வெளியீடு பற்றியான அறிவிப்பை மின்னஞ்சல் செய்த நிமிடத்தில் இருந்து அன்பர்களின் மகிழ்ச்சியும், வாழ்த்தும் விடையாக வந்த வண்ணம் உள்ளன.

எங்கிருந்தாலும் அன்பையும் வாழ்த்தையும் என் நிகழ்வுக்கு அனுப்பி மகிழ்வூட்டிய வாப்பா அப்துல் ஜப்பார், தமிழ்நேயர் சு. குமணராசன், கவிஞர் புதியமாதவி அக்கா, கவிஞர் வைகைச்செல்வி, கவிஞர் திலகபாமா, கவிஞர் மா.தமிழ்ப்பரிதி, கவிஞர் மதுமிதா, அண்ணன் ஹாஜி முகமது, பேராசிரியர் மு.இளங்கோவன், கவிஞர் புகாரி, கவிஞர் அபுல்கலாம் ஆசாத், நண்பர்கள் சுகைப், நந்தவனம் சந்திரசேகரன், மூர்த்தி, ரஞ்சித், நக்கீரர், சுப்ரமணியன், த.ஞானசேகரன், பக்குருதீன், பாலாஜி, மகள் எழில் பாரதி இன்னும் நிகழ்வில் நேரடியாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

விழாவிற்கு பிறகு இன்னும் விரிவாக சந்திப்போம்.